தமிழக பாஜக அண்ணாமலை, விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு வீடுகளில் வைத்து விநாயகரை வழிபடலாம் என்றும் பொது பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. காலம் காலமாக விநாயகர் சதுர்த்தி விழா நம்முடைய வாழ்க்கை முறையில் கலந்த ஒரு நிகழ்ச்சியாகும். டாஸ்மாக் கடையை திறந்து அதிகமாக மக்களை கூட விடுகிறோம்.
ஆனால் கொரோனாவை காரணம் காட்டி விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு அதற்கு கட்டுப்பாடு விதிக்கலாம். ஆனால் நடத்தவே கூடாது என்பதை பாஜக ஏற்காது என்று தெரிவித்தார். இந்நிலையில் சிபிஐஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், பாஜக அண்ணாமலை தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துவோம் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது. கொரோனா காலத்திலும் கூட தங்கள் கலவரத் திட்டங்களை கைவிட பாஜக தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளார்.