தடையை மீறி ஆர்பாட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியினர் 37 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் சிக்னல் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 161-வது சட்டத்தை பயன்படுத்தி சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இதற்கு கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், ஜெயபால் ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். இதனையடுத்து ஆர்பாட்டத்தில் பங்கேற்ற ஆனைவரும் தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியுள்ளனர். மேலும் தடையை மீறி ஆர்பாட்டத்தில் பங்கேற்ற 37 உத்தமபாளையம் காவல்துறையினர் கைது செய்து கம்பம் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து பின்னர் விடுவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.