திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு இறைச்சி கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி சில கடைகளில் இறைச்சி விற்பனை நடைபெறுவதாக மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் அதிகாரிகள் திண்டுக்கல் தெற்கு ரதவீதி, ஆர். எம்.காலனி, திருச்சி சாலை ஆகிய இடங்களில் அதிரடியாக ஆய்வு நடத்திய போது சில கடைகளில் இறைச்சியை விற்பனை செய்தது உறுதியானது.
இதனை அடுத்து விற்பனைக்காக வைத்திருந்த 350 கிலோ கோழி, ஆடு இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து கிருமி நாசினியை தெளித்து குழி தோண்டி புதைத்தனர். மேலும் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.