உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒரு சில விஷயங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அப்படி தற்போது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மாளிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் டெலிவரி ஊழியராக வேலை செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார.
இந்த வீடியோவில் பணியாற்றும் அந்த மாற்றுத்திறனாளி பெண் தங்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக டூவீலரில் பொருட்களை டெலிவரி செய்கிறார். தன்னுடைய பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இந்த பணியை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். இவருடைய இந்த பணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பையை டூவீலரில் பின்பக்கம் வைத்துக்கொண்டு அசால்டாக வண்டி ஓட்டுவது போன்ற வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. நெட்டிசன்கள் இவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
बेशक मुश्किल है ज़िन्दगी… हमने कौनसा हार मानना सीखा है! सलाम है इस जज्बे को ♥️ pic.twitter.com/q4Na3mZsFA
— Swati Maliwal (@SwatiJaiHind) September 10, 2022