Categories
மாநில செய்திகள்

தடை இல்லைன்னா ரோட்ட போடுங்க பா…. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு….!!!!

நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை இல்லை என்றால் சாலை பணிகளை உடனே முடிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அயனாவரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டு, வேப்பம்பட்டு, கந்தன் வாயில், ஜமீன் கொரட்டூர், தண்டலம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகில் லெவல் கிராசிங்கை கடந்து, சென்னை – திருவள்ளூர் நெடுஞ்சாலையை அணுக வேண்டிய சூழல் உள்ளது. இதை கருத்தில் கொண்டு ரயில்வே மேம்பாலம் சுரங்கப் பாதை கட்ட 2010ஆம் ஆண்டு 30 கோடி ரூபாயில் பணிகள் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு காரணமாக இந்த பணி முழுமையாக முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே இருந்த லெவல் கிராசிங்கும் அகற்றப்பட்டதால் பள்ளி மாணவர்கள், முதியோர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் ரயில் தண்டவாளங்களை கடந்து செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் ரயிலில் மோதி பல இழப்புகள் ஏற்படுகின்றன.பெருமாள்பட்டு சாலையில் பாலம் தொடர்பான பணிகள் முடிவடைந்த நிலையில், மற்றொரு பகுதியில் பணிகள் நடைபெறாமல் உள்ளது. எனவே பாலத்தை விரைந்து கட்டி முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் தடை உத்தரவுகள் எதுவும் இல்லை என்றால், நிலம் கையகப்படுத்தும் பணிகளை முடித்து சாலை பணிகளை முடிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

Categories

Tech |