Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தடை செஞ்சும் இப்படியா..? விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்… அதிகாரி தகவல்..!!

சிவகங்கையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனையில் கண்டுபிடித்தனர்.

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு பாதுகாப்பு அறை துறைக்கு தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணன் தலைமையிலான குழுவினர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாவதி உத்தரவின் பேரில் அங்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது ரூ.1 லட்சம் மதிப்பிலான சுமார் 220 கிலோ கொண்ட குட்கா, பான்பராக் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அந்த குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த புகையிலைப் பொருள்களை ஆய்விற்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |