தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் டீ கல்லுப்பட்டி பகுதியில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சொந்த ஊரில் பெட்டி கடை ஒன்றை நடத்தி அதில் மளிகை வியாபாரம் செய்து வருகிறார் . இந்நிலையில் டீ கல்லுப்பட்டி காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது , பொன்ராஜ் பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட 141 புகையிலை பொருட்கள் இருப்பதை கவனித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் புகையிலை பொருள்களை பறிமுதல் செய்ததோடு மட்டுமல்லாமல் பொன்ராஜ்ஜை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் கண்ணியம்பட்டி பகுதியை சேர்ந்த குபேந்திரன் என்பவரது பெட்டிக்கடையிலிருந்து 26 புகையிலை பாக்கெட்டுகளை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சேடப்பட்டி காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளார்கள். மேலும் குபேந்திரனை கைது செய்து வழக்குப் பதிந்துள்ளார்கள்.