ரோந்து பணியில் இருந்த காவலர்கள் பெட்டிக்கடையிலிருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் தற்போது 2021 கான சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது . இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன . இதனைத் தொடர்ந்து பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க காவல்துறையினர்கள் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் வில்லூர் பகுதியின் காவலர்கள் புளியங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .
அப்போது அதே பகுதியில் வசித்து வரும் பாண்டியராஜன் என்பவர் பெட்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார் . அக்கடையில் அவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்வது தெரிய வந்தது . இதையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ததோடு மட்டுமல்லாமல் பாண்டியராஜன் மேல் வழக்குப்பதிவு மேற்கொண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.