அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சில கடைகளில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கிணத்துக்கடவு, கோவில்பாளையம், காளியண்ணன் புதூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த சோதனையின் போது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள் சில கடைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதை பறிமுதல் செய்த அதிகாரிகள் 7 கடைகளுக்கு ரூபாய் 7,00 அபராதம் விதித்துள்ளனர். மேலும் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் சிகரெட் போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.