தடுப்பணையில் மூழ்கி 12-ஆம் வகுப்பு மாணவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் இலியாஸ் அஹமத்(45), என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இலியாஸ் 12-ஆம் வகுப்பு மாணவரான உஜேர் பாஷா(17), உவேஸ் அஹமது, ராகில் பையஸ் ஆகிய 3 பேருடன் தடை செய்யப்பட்ட பகுதியை கடந்து பாலாற்று தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் அணையில் இறங்கிய போது கால் வலிக்கு உஜேர் பாஷா அணையில் தவறி விழுந்து மூழ்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உஜேர் பாஷா அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.
அப்போது இலியாஸ் அகமதும் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு உஜேர் பாஷா, இலியாஸ் அகமது ஆகிய இரண்டு பேரின் சடலாங்களை மீட்டு ஆந்திர போலீசார் குப்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.