பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய 3 ஹோட்டல்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் குருசாமி தலைமையில் நகராட்சி பணியாளர்கள் பல்வேறு முக்கிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 3 ஹோட்டல்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியது தெரியவந்தது. அந்த பிளாஸ்டிக் பைகளில் விற்பனை செய்வதற்காக ரசம், மோர், சாம்பார் ஆகிவற்றை கட்டி வைத்துள்ளனர்.
இந்நிலையில் நகராட்சி அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அழித்துவிட்டனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். இதனை எடுத்து மூன்று ஹோட்டல் உரிமையாளர்களிடமிருந்து அதிகாரிகள் 7 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தனர்.