Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை… அதிரடி காட்டிய அதிகாரிகள் …!!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதாக பேரூராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்  பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் சுகாதார  அலுவலர்கள் பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே 2 கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 620 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த ஒரு கடைக்கு 15,000 ரூபாய் அபராதமும், மற்றொரு கடைக்கு 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கடையில் ஏற்கனவே பிளாஸ்டிக் பொருள் விற்றதாக  கூறி அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்தியதால் அந்த கடையை பூட்டி சீல் வைக்கப்பட்டதாக பேரூராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |