Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வீட்டிலேயே தயாரிக்க ஆரம்பிச்சாசா…. தடை செய்த பொருளை எப்படி விற்பனை செய்யலாம்… கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததால் வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சாலையோர கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவலின் படி சாலையோர கடைகளில் சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின் போது அந்த பகுதியில் ஒருவரின் வீட்டிலிருந்தே கடைகளுக்கு புகையிலை பொருட்கள் வருவதாக கடை ஊழியர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து அந்த வீட்டில் சென்று சோதனை நடத்திய போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக குவித்து வைத்து இருந்ததை கண்டறிந்த காவல்துறையினர், அங்கிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து இதற்கு காரணமானவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |