Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தடை விதிக்கப்பட்ட பகுதி…. மண்டபத்தில் சிக்கிய லாரி…. நெல்லையில் பரபரப்பு…!!

தடை விதிக்கப்பட்ட வழியாக சென்றதால் லாரி மண்டபத்தில் சிக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் சந்தி பிள்ளையார் கோவில், காட்சி மண்டபம் அமைந்துள்ள சேரன்மகாதேவி சாலையில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி மண்டபத்தின் மைய பகுதியில் வாகனங்கள் செல்லாமல் இருப்பதற்காக இரும்புத் தடுப்பு அமைத்துள்ளனர். இதனால் பக்கவாட்டு வழியில் மோட்டார் சைக்கிள், ஆட்டோ போன்ற வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில் அம்பை நோக்கி சென்ற லாரி குறுகலான பாதை வழியாக செல்ல முயன்ற போது நடுவில் சிக்கிக் கொண்டது. மேலும் மண்டபத்தின் கல் தூணும் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த லாரியை பின்னோக்கி இயக்கி வெளியே கொண்டு வந்தனர். அதன்பிறகு தடையை மீறி குற்றத்திற்காக லாரி ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |