Categories
தேசிய செய்திகள்

தட்டச்சுப் பிழையால்… முதல் மந்திரிக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்… இதான் நடக்க போகுது… காங்கிரஸ் விமர்சனம்…!!!

இமாச்சல பிரதேசத்தில் தட்டச்சு பிழையால் முதல் மந்திரிக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்-மந்திரியாக ஜெய்ராம் தாக்குர் உள்ளார். பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களான கர்நாடகா, குஜராத், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து முதல்வர் மாற்றப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இமாசல பிரதேசத்திலும் முதல்வர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் பரவி வந்துள்ளது. இந்நிலையில் மாநில மக்கள் தொடர்பு திட்ட சமீபத்தில் வெளியிட்டது. அதில் முதல் மந்திரி பெயரை ஜெயராம் என்பதற்கு பதிலாக ஜாவோ ராம் என்று தட்டச்சு செய்து இருந்தனர்.

இந்தியில் ஜாவோ என்றால் செல் என அர்த்தம். இதையடுத்து முதல் மந்திரி மாற்றப் போவதாக தகவல் வெளியானது. பின்னர் தட்டச்சுப் பிழை ஏற்பட்டதை உணர்ந்த மக்கள் தொடர்பு துறை உடனடியாக திருத்தம் செய்தது. இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் குல்தீப் ரத்தோர் தெரிவித்ததாவது: இது எதர்ச்சியாக நடந்த தவறாக இருந்தாலும், நடக்கப் போவது தான் வெளியாகியுள்ளது. விரைவில் இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் ஜெயராம் தாகூர் மாற்றப் போவது உண்மைதான் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |