Categories
மாநில செய்திகள்

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் செப்டம்பர் 18ல் தொடக்கம்…. வெளியான அறிவிப்பு…!!!!

தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் 3,500-க்கும் மேற்பட்ட வணிகவியல் தட்டச்சுப் பயிலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு நடப்பு ஆண்டு நடைபெறும் தேர்வுக்கான தேதிகள், தேர்வு மையங்கள் உள்ளிட்ட விவரங்கள்  வெளியிட்டுள்ளது. அதன்படி, தட்டச்சு தேர்வுகள் செப்.18, 19 ஆகிய தேதிகளிலும், கணக்குப்பதிவியல் தேர்வு செப்.24-ம் தேதியிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுருக்கெழுத்து தேர்வு செப்.25, 26 ஆகிய தேதிகளிலும், சுருக்கெழுத்து அதிவிரைவுக்கான தேர்வு செப்.27 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். தட்டச்சு தேர்வுகளுக்குத் தமிழகம் முழுவதும் 185 தேர்வு மையங்கள் உட்பட 218 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களை http://www.tndte.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |