தட்டச்சு தேர்வுக்கான விவரம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக தட்டச்சு பயிலக சங்கத்தின் மாநில தலைவர் வைத்தியநாதன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தட்டச்சு தேர்வு வருகிற 26-ஆம் தேதி 185 மையங்களில் நடைபெறவிருக்கிறது என கூறியுள்ளார். இதில் 26-ம் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை தேர்வுக்கான 3 அணிகளுக்கும், முதுநிலை தேர்வுக்கான 2 அணிகளுக்கும் தேர்வு நடைபெறவிருக்கிறது.
இதைத்தொடர்ந்து 27-ம் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை தேர்வுகளின் 4-வது மற்றும் 5-வது அணிக்கும், முதுநிலைத் தேர்வுகளின் 3-வது மற்றும் 4-வது அணிக்கும் தேர்வு நடைபெறுகிறது. இதே நாளில் ஹை ஸ்பீடு தேர்வும் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்வு கள்ளக்குறிச்சியில் ஏ.கே.டி நினைவு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து நடைபெறவிருக்கிறது. இதில் 6-ம் வகுப்பு படித்தவர்கள் புகுமுக இளநிலை தேர்வும், 8-ம் வகுப்பு படித்தவர்கள் இளநிலை தேர்வும் எழுதலாம். மேலும் 12-ம் தேர்ச்சி பெற்றவர்கள் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வும் எழுதலாம் என் கூறப்பட்டுள்ளது.