அக்காள் கணவர் மற்றும் மாமனாரை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள வீரகனூர் கொல்லர் தெருவில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரங்கநாதன்(30) என்ற மனைவியும், திவ்யபிரியா(26) என்ற மருமகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் திவ்யபிரியா லேப் டெக்னீசியனான தனது சகோதரர் திவாகர்(24) என்பவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இந்நிலையில் திவ்யாபிரியாவின் வீட்டிற்கு சென்ற திவாகர் தனது அக்காவிடம் தகராறு செய்தது குறித்து தட்டி கேட்டுள்ளார்.
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த திவாகர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரங்கநாதனை குத்தியுள்ளார். அதனை தடுக்க வந்த கலியமூர்த்திக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதனால் காயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திவாகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.