Categories
அரசியல் மாநில செய்திகள்

தட்டிக்கேட்க தைரியமில்லை…. அண்ணாமலை பதவியை ராஜினாமா செய்யணும்…. ஜோதிமணி கடும் சாடல்…!!!

தமிழக பெண்களுடைய கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் விதமாக  தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை செயல்பட்டுள்ளதாகவும், உடனே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் பாஜகவில் தற்போதைய மாநில தலைவர் தங்களுடைய கட்சியை சேர்ந்த பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இல்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால் அதை தட்டிக் கேட்பதற்கு அவருக்கு தைரியம் இல்லாத போது குற்றவாளியை விட்டுவிட்டு குற்றவாளியின் குற்றத்தை வெளிக்கொண்டு வந்துவர்களை கட்சியை விட்டு நீக்கினார். இப்பொழுது பாரதிய ஜனதா கட்சிக்குள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அவலம் ஒரு கட்சியின் உட்கட்சி விவகாரம் அல்ல. பெண்களின் கௌரவம், கண்ணியம், பாதுகாப்போடு தொடர்புடையது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Categories

Tech |