Categories
அரசியல் மாநில செய்திகள்

தட்டி கேட்கிறோம்…. கதவு திறக்கும்… இல்லைனா…. அதிமுகவுக்கு திமுக எச்சரிக்கை …!!

தமிழக டிஜிபி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் டிஆர்.பாலு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கழகத்தின் ஆணைப்படி, 2,3 நாட்களாக திருவாரூர், நாகை  மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றுவதற்காக செல்லுகின்ற இடமெல்லாம்….. அவர் கருத்துக்களை  தெரிவித்துக்கொண்டு இருக்கும் போது திடீர் திடீரென காவல்துறையினர் வந்து கைது செய்து அழைத்துச் செல்கிறது.

பின்னர் பல மணி நேரம் காக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இரவு 10 மணி, 11 மணி என்று ஒவ்வொரு நாளும் விடுதலை செய்யப்படுகிறார். மூன்று நாட்களாக அது தான் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அதே நேரத்தில் பிஜேபியை சேர்ந்த நண்பர்கள் இதேபோன்ற ”வேல் யாத்திரை” போன்ற யாத்திரைகளை செய்கின்றபோது கைது  செய்யப்பட்டால் அவர்களை மாலையிலோ அல்லது நாலு மணிக்கு விடுகிறார்கள். ஆனால் உதயநிதி ஸ்டாலினை பல மணி நேரம் காக்க வைத்து  விடுதலை செய்கிறார்கள்.

எங்களுடைய இயக்கத்தின் கைது என்பதும், போராட்டம் என்பதும், சிறை என்பதும், சித்ரவதை என்பதும் பார்த்த ஒன்றுதான். மு க ஸ்டாலின் அவர்கள் மிசா சிறையில் ஓராண்டு இருந்தது மட்டுமல்ல. அடி, உதை, பட்டு உடல் முழுவதும் ரத்தம் சொட்டச்சொட்ட சிறையில் கிடந்தவர்.

ஏறத்தாழ 20 முறைக்கு மேல் கைது செய்யப்பட்டிருக்கிறார். தலைவர் கலைஞர் அவர்களும், மாறன் அவர்களும் படாதா கொடுமைகள் அல்ல. எல்லா சிறை வாசமும் அனுபவித்துள்ளார். அப்படி பட்ட  குடும்பத்தை சார்ந்த பிள்ளை இத்தகைய தியாகத்தையும் செய்வதற்கு தயார்.

ஆனால் அதே நேரத்தில் கழகத்தில் இருக்கக்கூடிய எங்களைப் போன்றவர்கள், இப்படிப்பட்ட கொடுமையை பார்த்துக்கொண்டு இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. இந்த கொடுமை நடப்பதை தட்டிக் கேட்க வேண்டும். ஒரு அராஜக ஆட்சி நடக்கிறது. அந்த அராஜக ஆட்சியில் இருக்கும் டிஜிபி அவர்கள் முறைப்படி, அவர்கள் சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டியது அவரது கடமை. அந்தக் கடமையிலிருந்து தவறி இருக்கிறார்கள் நேரடியாகச் சொன்னோம்.

பிஜேபிக்கு ஒரு நீதி, திராவிட முன்னேற்ற கழகத்துக்கு ஒரு நீதியா ? அமித்ஷா வந்தார். இடைவெளி இருந்ததா ? கூட்டம் கூட்டமாக வந்தார்கள். ஏர்போர்ட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் நடந்து போகிறார். நடந்து போகும்போது கை அசைக்கிறாரு. இது எல்லாம் அரசியலாக பார்ப்பதற்கு சரியாக இருக்கும்.

ஆனால் மக்களுக்கு கொடுக்க வேண்டிய நியாயமான அந்த இடைவெளியை பின்பற்றி நடந்தார்களா ? பச்சைத் துண்டு பழனிச்சாமி போற இடமெல்லாம் என்ன நடக்கு ? கூட்டம் சேர்வது… கூட்டம் எப்படி சேருது ? எங்களுக்கு சேருகின்ற மாதிரி இல்ல, அழைத்து வரப்படுகிறார்கள்.

லாரியில் அழைத்து வருகின்றார்கள், பேருந்தில் அழைத்து வரப்படுகின்றார்கள். வேனில் அழைத்து வருகின்றார்கள். அப்படி அழைத்து வந்து கூட்டம் கூடுகின்ற அந்த இடத்துக்கு எல்லாம் போலீசும் துணை இருக்கிறது.

அழைத்துக் கொண்டு செல்வது பச்சைத் துண்டு பழனிச்சாமி கூட்டத்துக்கு தான் என போலீசுக்கு தெரியுது. ஆனால் டிஜிபி தலைமையில் இருக்கக்கூடிய காவல்துறை கம்முனு பேசாம இருக்கு. இது எப்படி நியாயம் ? இதையெல்லாம் கேட்க தான் நாங்கள் வந்தோம்.

சட்டம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். சட்டத்திற்கு முன் மக்கள்  சமம் தான்.எங்களுக்கு தருவதற்கு நீதி வழங்குவதற்கு தயாராக இல்லை ஆகவே தட்டி கேட்டிருக்கின்றோம். இன்று தட்டப்பட்ட இந்த கதவு சரியாக திறந்து, முறைப்படியான ஒரு நியாயத்தை வழங்க வேண்டும் இல்லையேல் நாளைக்கு ( இன்று ) நாங்கள் எடுக்கின்ற முடிவு படி நடவடிக்கை எடுப்போம் என டிஆர். பாலு தெரிவித்தார்.

Categories

Tech |