Categories
தேசிய செய்திகள்

தட்டி கேட்டால் டிசி தருவாங்களா….? 4-ஆம் வகுப்பு மாணவியின் அசத்தல் செயல்…. மெய்சிலிர்த்து நின்ற போலீசார்….!!!!

4-ஆம் வகுப்பு சிறுமி பள்ளியில் வழங்கப்படும்  மதிய உணவில் புழு இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தெலுங்கானாவில் உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள மீர்பேட்டை பகுதியில் அரசு பள்ளி ஒன்று  செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 4-ஆம்  வகுப்பு படிக்கும் ஒரு மாணவி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் கூறியதாவது,  “எங்களது பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவில் புழு மற்றும் கற்கள் கிடக்கிறது. இந்நிலையில் மாணவர்களால் பள்ளி உணவை சாப்பிட முடியவில்லை.

மேலும் இது குறித்து நாங்கள் பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்து விட்டோம். ஆனால் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் புகார் அளித்தால் மாற்று  சான்றிதழை கொடுத்து வெளியே செல்லுங்கள் என மிரட்டுகிறார்கள்” என அந்த மாணவி  கூறியுள்ளார்.இதனை கேட்ட போலீசார்  அந்த மாணவியை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர்.  இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு அழுகி போன காய்கறிகள், கெட்டுப்போன சமையல் எண்ணெய், பூச்சிகள் நிறைந்த அரிசி ஆகியவை  இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அங்கிருந்த பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக  தீவிர விசாரணை கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |