தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவி படித்து வருகிறார். அந்த மாணவி அப்பகுதியில் இருக்கும் மளிகை கடை அருகே இருக்கும் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது சத்ரியன் என்பவர் தனது மனைவியை தரக்குறைவாக பேசி திட்டியதாக தெரிகிறது. இதனை கல்லூரி மாணவி தட்டி கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த சத்ரியன் கத்தியை காட்டி கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தர்மபுரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.