தொழிலாளியை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.மருதூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான யோகேஸ்வரன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் கே. கே சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் குணா, ராகுல், சபரி ஆகியோர் தங்கள் மோட்டார் சைக்கிளால் யோகேஸ்வரன் மீது மோதுவது போல முந்தி செல்ல முயற்சி செய்தனர்.
இதனை தட்டிக் கேட்ட யோகேஸ்வரனை மூன்று பேரும் தகாத வார்த்தைகளால் திட்டி உருட்டு கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த யோகேஸ்வரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராகுல் சபரி குணா ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.