Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தட்டி கேட்ட தம்பியின் மனைவி…. ஸ்குருடிரைவரால் குத்திய அண்ணன்…. போலீஸ் நடவடிக்கை…!!

தம்பியின் மனைவியை ஸ்குருடிரைவரால் குத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்த் என்ற தம்பி உள்ளார். இவர்கள் இருவரும் தந்தையின் பூர்வீக இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதற்கு மின்இணைப்பு கொடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மின் இணைப்பை முருகேசன் அகற்றியதாக கூறப்படுகிறது.

இதனால் வசந்தின் மனைவியான பிரியா என்பவர் அங்கு சென்று முருகேசனை தட்டி கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த முருகேசன் பிரியாவை அவதூறாக பேசி அவரது கழுத்தில் ஸ்குருடிரைவரால் குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த பிரியாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |