Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தட்டி கேட்ட தொழிலாளிக்கு அடி உதை…. அத்துமீறிய நான்கு பேரிடம்…. போலீஸ் விசாரணை….!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் அருள்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அருள்ராஜ் தனது இருசக்கர வாகனத்தில் வி.மருதூர் பகுதியில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அப்பகுதியில் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். இதனால் ஏற்பட்ட தீப்பொறி அருள் ராஜின் மேல் விழுந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அருள்ராஜ் அந்த நான்கு பேரையும் திட்டி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நான்கு பேரும் அருள் ராஜை உருட்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயம் அடைந்த அருள்ராஜை அருகில் உள்ளவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து அருள்ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் தகராறில் ஈடுபட்ட நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |