Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தட்டி கேட்ட பொதுமக்கள்…. ஓட்டுநர்-கண்டக்டரின் தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

பேருந்து ஓட்டுநரும், கண்டக்டரும் இணைந்து பொதுமக்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து அதிக ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது. இதனை அங்கு சென்று கொண்டிருந்த பொதுமக்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் பேருந்தின் ஓட்டுநரும், கண்டக்டரும் கீழே இறங்கி வந்து பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இருவரும் இணைந்து பொதுமக்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்த புகாரின் பெரிய வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |