Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“தண்டனை கைதியாக இருக்கும் மகன்” 81 வயது மூதாட்டியின் கோரிக்கைக்கு இணங்கிய நீதிபதிகள்…. அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரிகேசவநல்லூரில் கருமேனி அம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி மதுரை ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ஒரு கொலை வழக்கில் எனது மகன் பழனிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் பாளையங்கோட்டை சிறையில் கைதியாக இருக்கிறார். 81 வயதான எனக்கு உடல் மிகவும் சோர்ந்து விட்டது. இந்த நேரத்தில் எனது மகனுடன் இருக்க விரும்புகிறேன். எனவே பழனிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், நிஷா பானு ஆகியோர் விசாரித்துள்ளனர். அப்போது மனுதாரருக்கு பரோல் வழங்கினால் சில பிரிவினர் இடையே பதற்றமான சூழ்நிலை உண்டாகும். எனவே பழனிக்கு பரோல் வழங்கக்கூடாது என அரசு வழக்கறிஞர் திருவடிகுமார் வாதாடியுள்ளார். நீதிபதிகள் கூறியதாவது, இதனை அடுத்து மனுதாரர் 81 வயதுடையவர். 4 ஆண்டுகளுக்கு மேலாக மூதாட்டி அவரது மகனை சந்திக்காமல் இருக்கிறார். சிறிது காலம் தன்னுடன் மகன் இருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்.

எனவே போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் பழனிக்கு 20 நாட்கள் சாதாரண பரோல் வழங்கப்படுகிறது. இந்த நாட்களில் அரிகேசவநல்லூரில் தனது தாயாருடன் பழனி இருக்க வேண்டும். அந்த ஊரை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது. முக்கூடல் காவல் நிலையத்தில் தினமும் மாலையில் கையெழுத்து போட்டுவிட்டு 20 நாட்கள் முடிந்தவுடன் பாளையங்கோட்டை சிறை சூப்பிரண்டு முன்பு பழனி சரணடைய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Categories

Tech |