ரயில்வே தண்டவாளத்தில் வாலிபரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை நாளங்காடி பின்புறம் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் ராஜ் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு மோகன்ராஜ் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்துள்ளார். இந்நிலையில் மோகன்ராஜ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.