ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுந்தர பெருமாள் கோவில் பகுதியில் இருக்கும் ரயில் தண்டவாளத்தில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி அதே பகுதியில் வசித்த வைரம்(75) என்பது தெரியவந்தது. தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.