ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள கீழவத்தியம் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் கீழவதியம் பகுதியில் வசித்த ஓட்டுனரான ஜெயபிரகாஷ் என்பது தெரியவந்தது. இவருக்கு சாந்தி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் செவித்திறன் குறைவாக இருந்த ஜெயப்பிரகாஷ் வீட்டிற்கு செல்வதற்காக அப்பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ரயில் மோதி அவர் உயிரிழந்தது தெரியவந்தது.