சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த திமிரிக்கோட்டை அருகே ரயில் தண்டவாளத்தில் நேற்று காலை வாலிபர் ஒருவர் சடலமாக கிடப்பதாக தர்மபுரி ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ரயில்வே காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தவர் கீழ்காமாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மகன் ஸ்ரீதர் (30) என்பது தெரியவந்தது.
அத்துடன் ஸ்ரீதர் ஈரோடு பெருந்துறை அருகே ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் ஊழியராக வேலைசெய்து வந்துள்ளார். அவரது மனைவி சென்ற 2 வருடங்களுக்கு முன் தனது பெண் குழந்தையுடன் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்ரீதர் எப்போதும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிகின்றனர். மேலும் இதுபற்றி ரயில்வே காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.