தண்டவாளத்தில் மாணவி பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் மோகன் பதான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேகா ஸ்ரீ (30) என்ற மகள் இருந்துள்ளார். இந்த மாணவி எம்டெக் மற்றும் பிஎச்டியில் முனைவர் பட்டம் பெற்றுவிட்டு சென்னை அடையாறு ஐஐடியில் 3 மாதம் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வந்துள்ளார். இவர் அடையாறில் உள்ள ஒரு விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆவடியில் இருந்து இந்து கல்லூரி செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் மேகா ஸ்ரீ பிணமாக கிடந்துள்ளார்.
இவருடைய தலையில் பலத்த காயங்கள் இருந்துள்ளது. இதுகுறித்து ஆவடி ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் சடலமாக கிடந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணவி உயிரிழந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.