திண்டுக்கல் மாவட்டம் அயலூர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அய்யலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ரயில் மோதி இவர் இறந்துள்ளார்.
பின்னர் போலீசார் முத்துசாமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் எதிர்பாராதவிதமாக நடந்ததா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.