ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மேதலோடை உயர்நிலைப் பள்ளியில் ராபர்ட் ஜெயக்குமார் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் பெலிசியா மேக்டலின் தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து பெலிசியா வழக்கம் போல பள்ளி பேருந்தில் ரோமன் சர்ச் பகுதியில் இறங்கியுள்ளார். ஆனால் அவர் வீட்டிற்கு வராததால் பெற்றோர் பெலிசியாவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலாததால் ராபர்ட் ஜெயக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் ஆதம் நகர் பின்பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் இளம்பெண் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பள்ளி சீருடை மற்றும் ஷூ ஆகியவற்றை வைத்து இறந்தது பெலிசியாவாக இருக்கலாம் என சந்தேகப்பட்டு பெற்றோரை வரவழைத்தனர்.
அவர்கள் இறந்தது தங்கள் மகள் தான் என உறுதிப்படுத்திய பிறகு மாணவியின் உடலை மீட்டு போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகளின் உடல் பல துண்டுகளாக சிதறி கிடந்ததை பார்த்து பெலிசியாவின் பெற்றோர் கதறி அழுதனர். இதனையடுத்து மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.