Categories
தேசிய செய்திகள்

“தண்டவாளத்தில் நின்று ஸ்டைலா செல்பி எடுத்த இளைஞர்கள்….!!” ரயில் மோதி பலியான சம்பவம்…!!

டெல்லியில் உள்ள புறநகர் ரயில்வே பகுதியான குர்கிராமில் ரயில்வே மேம்பாலம் அருகே நான்கு இளைஞர்கள் செல்பி எடுக்க முயன்ற போது ரயில் மோதி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், டெல்லியின் சராய் ரோஹில்லாவிலிருந்து, அஜ்மீர் நோக்கிச் சென்ற ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலானது, குர்கான் ரயில் நிலையத்திலிருந்து பாசாய் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது 18 முதல் 25 வயதிற்குட்பட்ட நான்கு இளைஞர்கள் ரயில்வே தண்டவாளத்தின் மீது ஏறி நின்று செல்பி எடுத்துள்ளனர். ரயில் மிக அருகில் வரும்போது கூட அவர்கள் அசால்டாக நின்று செல்பி எடுத்துள்ளனர். இதனால் ரயில் அவர்கள் மீது மோதி 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் நான்கு பேரும் தேவிலால் காலனி பகுதியில் வசிக்கும் சமீர் (19), முகமது அனஸ் (20), யூசுப் என்கிற போலா (21), யுவராஜ் கோகியா (18) என்பது தெரியவந்தது.

Categories

Tech |