Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் பழுதாகி நின்ற லாரி…. பின்னர் நடந்தது என்ன?….. பெரும் பரபரப்பு….!!!

கோவை-மேட்டுப்பாளையம் இடையில் ரயில் தண்டவாளங்களை மாற்றும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. தற்போது தண்டவாளங்கள் மாற்றப்பட்டு ஒரு அடிவரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சாலையில் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தண்டவாளங்களும் உயர்த்தப்பட்டுள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 8.45 மணிக்கு மதுபானங்களை இயற்றி வந்த லாரி ஒன்று துடியலூர் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது திடீரென லாரியின் ஆக்சில் கட்டாகி தண்டவாளத்தின் குறிக்கே நின்றது. அந்த நேரத்தில் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் வரும் நேரம் என்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் லாரியின் 30 டன் அளவிற்கு மதுபானங்கள் இருந்ததால் அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த கேட் கீப்பர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

அந்த தகவலின்படி அதிகாரிகள் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநர்களுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் கேட் கீப்பர் சிவப்பு விளக்குடன் ரயில்வே தண்டவாளத்தில் காத்திருந்தார். இதனால் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் 50 மீட்டருக்கு முன்னதாக நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டு இரும்பு ரோப் மூலம் கட்டி லாரியை இழுத்தனர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தண்டவாளத்தில் பழுதாகி நின்ற லாரியை அகற்றினர். இதனையடுத்து கேட் அடைக்கப்பட்டு, அங்கு காத்திருந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் 1 மணிக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது. தண்டவாளத்தில் லாரி சிக்கியதும், நீலகிரி எக்ஸ்பிரஸ்ண் ரயிலுக்கு தகவல் கொடுத்து முன்னதாக நிறுத்தியதால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் தொடர் விபத்துக்கள் நடந்து வருவதால் தண்டவாளத்தின் உயரத்துக்கு ஏற்ப சாலையை உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |