Categories
மாநில செய்திகள்

தண்டவாளத்தில் மண்சரிவு…. 17 ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக நாகர்கோவிலிலிருந்து கேரளா மார்க்கத்தில் ரயில்வே தண்டவாளத்தில் மண்சரிவு மற்றும் வெள்ளம் ஆகிய பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி – நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரம் வழித்தடத்தில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் 4 ரயில்கள் முழுமையாகவும், 17 ரயில்கள் பகுதி அளவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி நாகர்கோவில் -திருவனந்தபுரம் ரயில், கொல்லம் – திருவனந்தபுரம் ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு- குமரி, குருவாயூர் -சென்னை, மதுரை -புனலூர் உள்ளிட்ட 17 ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளன.

Categories

Tech |