தேனி மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் வீராசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவடியில் இருக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வீராசாமி இந்து கல்லூரி- ஆவடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி வேகமாக சென்ற மின்சார ரயில் மோதி வீராசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற வீராசாமியின் உடலை மீட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.