Categories
மாநில செய்திகள்

தண்டோரா போடுவதைத் தடை செய்யவேண்டுமா…? – வெடித்த சர்ச்சை… அவர்கள் கூறும் கருத்து என்ன…? வாங்க பார்ப்போம்…!!

அண்மையில் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் தண்டோரா முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அது பல்வேறு ஊடகங்களில் பேசு பொருளாக மாறியது.

இவர் இதை பதிவிட்டதற்கான முக்கிய காரணம் திருச்சி மாவட்டம் துறையூரில் அண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம். துறையூரில் உள்ள மாநிய நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் தானே தண்டோரா அடித்து தெரு தெருவாக சென்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் தொலைக்காட்சி வழி பாடம் படிப்பதற்கான அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஆசிரியரின் இந்த செயலை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

தமிழகத்தில் தண்டோரா முறை என்பது காலம் காலமாக பின்பற்றி வரும் ஒரு வழக்கம் தான். அந்த காலத்தில் கிராமங்களுக்கு ஒரு செய்தியை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் அதற்கு தண்டோரா அடித்துத் தான் கூறுவார்கள். இன்றளவிலும் வெள்ள அபாய எச்சரிக்கைகளை தெரிவிக்க ஒரு சில இடங்களில் தமிழக அரசே தண்டோரா போட்டு அறிவிக்கும் முறையை பயன்படுத்துகிறது.

இந்த தண்டோரா போட்டு அறிவிக்கு முறையை சில பட்டியலினத்தவர்கள் செய்து வருகின்றனர். இந்த சமுதாயத்தில் சமத்துவத்தை கொண்டு வர வேண்டுமாயின் இந்த முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த பல ஆண்டுகள் ஆயினும் இந்த முறை பின்பற்றப்பட்டு வருவது குறித்து பல்வேறு கேள்விகளும் எழுந்து வருகின்றது.

அப்படி இருக்கையில் இந்த தொழிலை மக்கள் விரும்பிதான் செய்கிறார்களா, இல்ல வேறு வழியின்றி செய்கிறார்கள் என்பதை குறித்து கேட்டபோது, பேசிய ஒரு சிலர் பொதுவாகவே தாங்கள் ஒதுக்கப்படுவதாகவும், இந்த கலையினால் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இக்கலையை ஊக்குவித்து உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதும் பலரின் கோரிக்கையாக உள்ளது.

Categories

Tech |