திண்டுக்கல் மாவட்டம் பேத்துப்பாறை கிராம பகுதிக்குள் காட்டு யானை ஒன்று புகுந்து பயிர்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேத்துப்பாறை, கணேசபுரம், அஞ்சுவீடு ஆகிய கிராமங்களை ஒட்டி வனப்பகுதிகள் உள்ளது. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிக அளவில் நடமாடுகின்றன. பேத்துப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானை ஒன்று உலா வருகிறது. மேலும் அந்த காட்டு யானை அப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் வீடுகளையும் சேதப்படுத்துகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் வனப்பகுதிக்குள் அந்த காட்டு யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கோடை காலம் ஆரம்பித்துள்ளதால் குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீரை தேடி யானைகள் வலம் வருவதால் அதனை வனப்பகுதிக்குள் விரட்டி வருகிறோம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.