Categories
அரசியல் மாநில செய்திகள்

தண்ணீக்கு NO… டாய்லெட்டுக்கு NO… தடை போட்ட ADMK…! போன் போட்ட கலைஞர்… ஸ்பாட்டுக்கே போன ஸ்டாலின்…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அன்றைக்கு இந்த கல்லூரியை இடிக்க கூடாது என்று பொன்முடி சொன்ன போது போல சட்டமன்றத்தில் நாங்கள் வாதிட்டோம், போரிட்டோம். இங்கு படித்துக் கொண்டிருந்த மாணவிகள், முன்னாள் மாணவிகள், பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உச்சக்கட்டமாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்த வளாகத்திற்கு உள்ளே மாணவிகள் உட்கார்ந்து அவர் மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார்கள். அப்படிப்பட்ட போராட்டத்தை நடத்திய காரணத்தால் அன்றைக்கு இருந்த அரசு கல்லூரிக்குள்  வரக்கூடிய குடிநீர் சப்ளையை நிறுத்துச்சு. கழிப்பறைகளை பயன்படுத்தக் கூடாது என்று தடை போட்டாங்க. கல்லூரியை மூடிவிட்டு இங்கு பணியாற்றிய பேராசிரியர்களை எல்லாம் வேறு ஊருக்கு இடமாற்றம் செய்தார்கள்.

அப்போது சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. கோபாலபுரத்தில் இருந்து தலைவர் கலைஞர் அவர்கள் எங்களுக்கு சட்டமன்ற கட்சியின் உடைய அலுவலகத்திற்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு ஒரு செய்தி சொன்னார்கள். சட்டமன்றம் முடித்துவிட்டு வீட்டுக்கு வரும் வழியில் கலைஞர் சொல்றாரு, ராணி மேரி கல்லூரியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க கூடிய மாணவிகள் எல்லாரையும் சந்தித்து ஆறுதல் சொல்லிட்டு வாங்க.

உங்களுடைய போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக ஆதரவு தரும் என்று செய்தி சொல்லிவிட்டு வாங்க என்று எங்களுக்கு உத்தரவு போட்டாங்க. அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு நானும் பொன்முடி அவர்களும் இன்னும் சிலரும் இங்கு வந்தோம் என அன்றைய கால நினைவுகளை குறிப்பிட்டார்.

Categories

Tech |