காஞ்சிபுரத்தில் கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆசிட்டை தண்ணீரென்று நினைத்து குடித்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருமுல்லைவாயலில் 60 வயதுடைய மேகனா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சர்க்கரை நோய் இருந்ததால் கண்பார்வையில் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் தினந்தோறும் மேகனா மிகவும் சிரமப்பட்டுதான் வந்திருக்கிறார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று நீரழிவு நோய்க்கான மாத்திரையை வாயினுள் போட்டுவிட்டு தண்ணீரை குடிப்பதற்கு பதிலாக பாட்டிலில் இருந்த கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆசிட்டை குடித்துள்ளார்.
இதனையடுத்து அவர் தொண்டை வலியால் அவதிப்பட்டு கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.