Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தண்ணீனு நினச்சு இதயா கலந்து குடிக்கனும்…. முதியவருக்கு நேர்ந்த சோகம்…. காஞ்சியில் பரபரப்பு….!!

காஞ்சியில் தண்ணீர் என நினைத்து மதுவுடன் திராவகத்தை கலந்து பருகிய முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் தனியார் கல்லூரியின் காவலாளியான காளி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று வீட்டிலிருந்த கழிவறையை சுத்தம் செய்ய வைத்திருந்த திராவகத்தை தண்ணீர் என நினைத்து மதுவுடன் கலந்து குடித்துள்ளார்.

இதனால் துடிதுடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மணிமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |