Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சமையல்காரர்…. செடியில் சிக்கியிருந்த சடலம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சமையல்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள படுக்கப்பத்து கீழ தெருவில் சித்திரைப் பாண்டி(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சமையல்காரர் ஆவார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் இசக்கி என்ற நண்பர் உள்ளார். இவர் சொந்தமாக லாரிகள் வைத்து ஜல்லி, மணல் ஏற்றி செல்லும் தொழில் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் சீதபால் பகுதியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த லாரிகளை பார்ப்பதற்காக சித்திரை பாண்டி, இசக்கி மற்றும் வீரபாண்டியன் ஆகியோர் சென்றுள்ளனர். இதனை அடுத்து நண்பர்கள் 3 பேரும் தோவாளை கால்வாயில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சித்திரை பாண்டி தண்ணீரில் அடித்து சொல்லப்பட்டார்.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சித்திரை பாண்டியை தீவிரமாக தேடி வந்தனர். நேற்று காலை தண்ணீருக்கு அடியில் செடியில் சிக்கியிருந்த சித்தரை பாண்டியின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |