தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி-தர்மபுரி சாலையில் மஞ்சமேடு பகுதியில் இருக்கும் தென்பெண்ணை ஆற்றில் தினமும் ஏராளமானோர் குளித்து செல்கின்றனர். நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பலர் ஆற்றுக்கு குளிக்க சென்றனர். இந்நிலையில் தர்மபுரி காந்தி நகரை சேர்ந்த அறிவழகன்(26) என்பவர் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவரை தண்ணீர் அடித்து சென்றது.
இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரை தேடும் பணியில் தீவிரமாக ஈட்டுபட்டனர். நேற்று 2-வது நாளாக டிரோன் உதவியுடன் அறிவழகனின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.