தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் தண்ணீரில் தத்தளிக்கும் மக்களுடைய கண்ணீரை துடைப்பபோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தன்னுடைய தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அன்றாட வாழ்விற்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைப்பதிலும், அவசர உதவிகளும் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கு திமுக அரசு மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறிய அவர் தொண்டர்கள் அனைவரும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.