அமெரிக்க நாட்டின் ஓக்லஹோமாவிலுள்ள ஒரு வீட்டில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் பெண் ஒருவர் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில், நீரில் தத்தளித்துக் கொண்டுள்ளார். தாய் குளித்து கொண்டிருந்த நிலையில் நீரை வேகமாக அடிக்கும் சத்தம் கேட்டதால் உடனே கீழே நின்ற 10 வயது மகன் ஒரு நொடி கூட தாமதிக்காமல் மறுகணமே படியேறி தாயை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
அதன்பின் உடனே நீரில் குதித்த சிறுவன் தன் தாயாரை பிடித்தபடி படிக்கட்டு அருகில் மெல்ல மெல்ல கொண்டுவந்தார். இறுதியில் வயதான ஒரு நபர் வந்துவிட, அவரின் உதவியுடன் தன் தாயை வெளியே கொண்டுவந்துள்ளார். இப்போது இந்த காட்சி அதிகம் வைரலாகி வரும் நிலையில், சிறிய வயதில் அச்சிறுவன் தன் தாயை காப்பாற்ற எவ்வளவு முனைப்பு காட்டுகிறான் என பலரும் பாராட்டி வருகின்றனர்.