Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தண்ணீரில் தத்தளித்த மகன்கள்…. காப்பாற்ற முயன்ற தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

குட்டையில் மூழ்கி தாய் மற்றும் மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கும்பிகுளம் கிராமத்தில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திக், சுபாஷ் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் பேச்சியம்மாள் தனது மகன்களுடன் கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து துணி துவைத்து கொண்டிருந்த பேச்சியம்மாள் தனது மகன்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதன்பின் பேச்சியம்மாள் நீண்ட நேரம் போராடி கார்த்திக்கை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு சேர்த்தார்.

இதனை எடுத்து சுபாஷை மீட்பதற்காக சென்றபோது தாய்-மகன் இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சியம்மாள் மற்றும் சுபாஷ் ஆகிய இருவரின் சடலங்களையும் மீட்டனர். அதன்பின் காவல்துறையினர் தாய் மற்றும் மகனின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |