திருவாரூர் மாவட்டத்தில் குளத்தில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பகுதியில் செல்லையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அருள்முருகன் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் அருள்முருகன் தனது நண்பர்களுடன் சோழ பாண்டி பகுதியிலுள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராத விதமாக தண்ணீரில் அருள்முருகன் மூழ்கியுள்ளார்.
இதனையடுத்து அருள்முருகனுடன் குளித்து கொண்டிருந்த நண்பர்கள் அவரை காணாததால் அதிர்ச்சியடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி குளத்தில் அருள்முருகணை பிணமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.