காரில் இருந்த அமிலத்தை தண்ணீர் என நினைத்து குடித்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டத்தில் அமைந்த கே.வி குப்பம் அருகே சென்னங்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் நாகாரத்தினம். கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு காரில் இருந்த அமிலத்தை தண்ணீர் என நினைத்து குடித்துவிட்டார்.
இதனால் எரிச்சலில் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கே. வி குப்பம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து, மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் நாகரத்தினம் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த கே.வி குப்பம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.